ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்ட சித்தர் முத்துவடுகநாதரை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
நவராத்திரியை முன்னிட்டு பல்வேறு கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிங்கம்புணரி பகுதியில் சித்தர் முத்துவடுகநாதர் கோவில் அமைந்துள்ளது.
அங்கு நவராத்திரியை முன்னிட்டு சித்தர் முத்துவடுகநாதருக்கு பால், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதனையடுத்து ரூபாய் நோட்டுகளால் சுவாமிக்கு மகாலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டது. இதனை பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி சித்தர் முத்துவடுகநாதரை தரிசனம் செய்தனர். மேலும் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் சென்று சித்தர் முத்துவடுகநாதரை வழிபட்டனர்.