Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

பிப்ரவரி 2 உலக சதுப்பு நில நாள் – உலகம் முழுவதும் அனுசரிப்பு …!!

பிப்ரவரி 2 உலக சதுப்பு நில நாள். உலக சதுப்பு நில நாள் என்பது சதுப்பு நிலங்களின் முக்கியத்துவத்தினை மக்கள் அறிந்துகொள்ள கொண்டாடப்படும் நாளாகும். உலகில் உவர்நீர் நிறைந்த கடலுக்கும் நிலங்களுக்கும் இடையில் குறைந்த ஆழத்தில் ஆண்டு முழுவதும் நீர் தேங்கி இருக்கும் பகுதியாக சதுப்பு நிலங்கள் உருவாகின.

பூமியின் மொத்த பரப்பில் 6 சதவீத பகுதி சதுப்பு நிலங்களாக உள்ளன. இவை பெரும்பாலும் இயற்கையாக உருவானவை மனிதனால் உருவாக்கப்பட்டவை என இரண்டு பிரிவாக வகைப்படுத்தப்படுகின்றன. அலையார்டிக் காடுகள், குட்டைகள் உள்ளிட்டவை இயற்கையாக உருவானவை என்றும் ஏரிகள், குளங்கள், நீர்த்தேங்கும் குவாரி பள்ளங்கள் ஆகியவை மனிதனால் உருவாக்கப்பட்டவை என்றும் வகைப்படுத்தப்படுகின்றன.

1971ல் காஸ்பியன் கடற் பகுதியில் உள்ள ஈரான் நாட்டில் ராம்சர் நகரில் 18 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் சதுப்பு நிலங்களையும் நீர்நிலைகளையும் பாதுகாப்பது குறித்து முடிவு செய்து அது பற்றிய விவாத கூட்டத்தையும் அதே ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி தொடங்கி ஒருமனதாக முடிவு செய்யப்பட்டு உலக சதுப்பு நில நாளாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகின்றது. உலக சதுப்பு நில நாள் கொண்டாடப்படும் தினம் இன்று.

Categories

Tech |