Categories
தேசிய செய்திகள்

கேரள தங்கக் கடத்தல் வழக்கு : ஸ்வப்னாவுக்கு 7 நாட்கள் என்ஐஏ காவல்..!!

தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கேரளாவை உலுக்கிய தங்க கடத்தல் விவகாரம், இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப்  நாயர் ஆகிய இருவரையும்  நேற்று முன்தினம் பெங்களூரில் வைத்து என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.

அவர்கள் தமிழகத்தில் சேலம் வழியாக கேரளாவுக்கு அழைத்து வரப்பட்டு கொச்சியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.. இதில் ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப்  இருவருக்கும் 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் ஆணையிட்டது. இதனிடையே மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன்படிமுடிவு வரும் என என்ஐஏ எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் முடிவு வெளியாக தாமதமானது.

இந்த நிலையில் நேற்று இரவு கொரோனா பரிசோதனை என்பது எதிர்மறை முடிவுகளைக் கொண்டு வந்திருந்தது. இதையடுத்து இன்று காலை தேசிய புலனாய்வு முகாமை  சார்பில் என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இவர்கள் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் எனவும், அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி கிருஷ்ண குமார்  ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் இருவரையும் நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். அதன்படி இன்று மதியம் நீதிமன்றத்தில் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.

பின்னர் என்ஐஏ சார்பில் சிறப்பு வழக்கறிஞராக வாதிட்ட அர்ஜுன் என்பவர், இருவருமே தீவிரவாத செயல்களுக்காக தங்கம் கடத்தி இருப்பது தெரியவந்ததாக முக்கியமான கருத்தை குறிப்பிட்டு வாதாடினார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ண குமார் இருவரையும் 7  நாட்கள் 20 ஆம் தேதி வரை  காவலில் வைத்து தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார். 10 நாட்கள் காவலில் எடுக்க அனுமதி கேட்டு நிலையில் என்ஐஏ நீதிமன்றம் 7 நாட்கள் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

 

 

Categories

Tech |