தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள சொப்னா ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் வங்கி கணக்கு மூலம் வெளிநாட்டிலிருந்து 58 கோடி ரூபாய் முறைகேடாக பெற்றது அம்பலமாகியுள்ளது.
கேரளா அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் துணையுடன் தனி ராஜ்ஜியம் நடத்தி வந்த சுவப்னாசுரேஷின் மோசடிகள் குறித்து தேசிய புலனாய்வு முகமை மற்றும் சுங்கத்துறை ஏற்கனவே விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது வங்கி கணக்குகளை ஆய்வு செய்த அமலாக்கத்துறை ஐக்கிய அரபு அமீரகம் நாட்டின் தொண்டு தேவைகளுக்கு எனக்கூறி தனி வங்கி கணக்கு ஒன்றை தொடங்கி இருப்பதை கண்டுபிடித்தது.
அந்த குறிப்பிட்ட வங்கி கணக்கு மூலம் 58 கோடி ரூபாய் நிதி திரட்டியது விசாரணைகள் புலப்பட்டது. இந்த வங்கி கணக்கு போலி ஆவணங்களை காட்டி திறக்கப்பட்டதாக அமலாக்கத்துறை சந்தேகம் அடைந்து உள்ளது. அதே நேரத்தில் குறிப்பிட்ட வங்கி கணக்கில் இருந்து 20 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதால் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
இதே வங்கியில் சுவப்னா பெயரில் தனி கணக்கு ஒன்று இருப்பதும் இதில் எட்டு லட்ச ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது. துபாயிலிருந்து கேரள அரசுக்கு அனுப்பப்பட்டதாக கூறி 17 ஆயிரம் கிலோ பேரீச்சம்பழத்தை கொச்சி துறைமுகத்தில் இருந்து சுவப்னாசுரேஷ் நேரடியாக பெற்றதும் விசாரணைகள் கூறப்பட்டுள்ளது. தூதரகத்துக்கு கொடுக்கப்பட்ட விதிவிலக்குகளை சுவப்னா தனது சொந்த நலனுக்கு பயன்படுத்தியதும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.