சுவாதி கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக பிறழ் சாட்சியாக மாறிய சுவாதி உயர் நீதிமன்ற மதுரை கிளை வாக்குமூலம் அளித்திருக்கிறார். சிசிடிவி கட்சியில் இருக்கும் பெண் யார் என தெரியவில்லை என்று மூன்று முறைக்கு மேலாக கூறியுள்ளார் சுவாதி.
உண்மையை மனசாட்சிக்குட்பட்டு சொல்லுங்கள் என்று நீதிபதிகள் வலியுறுத்தி கேட்டபோதும் கூட கண்கலங்கியவரே சிசிடிவி கட்சியில் இருக்கும் பெண் யார் என்று தனக்கு தெரியவில்லை என்று மூன்று முறைக்கு மேல் சுவாதி கூறியிருக்கிறார்.
வாக்குமூலம் பொய் என்றால் உரிய நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்கள். ஆனாலும் கண்கலங்கியவரே அந்த வாக்குமூலத்தை பதிவு செய்கிறார் சுவாதி. அருகில் இருக்கும் அந்தப் பையன் யாரென்று கேட்டதற்கு கோகுல்ராஜ் போல தெரிவதாக கூறியிருக்கிறார் சுவாதி.