Categories
உலக செய்திகள்

“ஸ்வீடன் நாட்டின் புதிய பிரதமர் யார்?”.. நாடாளுமன்றத்தில் நாளை வாக்கெடுப்பு..!!

ஸ்வீடன் நாட்டின் புதிய பிரதமர் நாளை நாடாளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்வீடன் நாட்டின் பிரதமர் மற்றும் சமூக ஜனநாயக கட்சியின் தலைவராக இருந்த ஸ்டெஃபான் லோஃப்வென், சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியை தழுவினார். அதன் பின்பு, அவர் பிரதமர் பதவியிலிருந்து விலகினார். எனவே, நிதியமைச்சரான மக்டலெனா ஆண்டர்சன் கட்சி தலைவராக நியமிக்கப்பட்டார்.

மேலும், அவரை அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்க, நாடாளுமன்ற ஆதரவு அவருக்கு அவசியம். நாடாளுமன்றத்தில் 349 உறுப்பினர்கள் இருக்கும் நிலையில், 175 நபர்களின் ஆதரவு அவருக்கு தேவை. சமூக ஜனநாயக கட்சிக்கு, ஆதரவாக தற்போது 100 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். கூட்டணி கட்சிகளையும் சேர்த்து 174 உறுப்பினர்களின் ஆதரவு அக்கட்சிக்கு இருக்கிறது.

எதிர்க்கட்சிகள் பிரிந்திருக்கும் நிலையில், மக்டலெனாவிற்கு தகுந்த ஆதரவு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நாடாளுமன்ற அவைத் தலைவர், நாளை மக்டலெனாவை பிரதமராக தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பு நடைபெறும் என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |