Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மாலை நேர ஸ்னாக்ஸ்… கடலை மாவு பர்ஃபி – செய்முறை

கடலை மாவு பர்ஃபி

 

தேவையான பொருட்கள்

கடலை மாவு                      1/2 கிலோ

தண்ணீர்                                1/2 லிட்டர்

மஞ்சள் தூள்                        1 டீஸ்பூன்

புளி கரைசல்                        2 டீஸ்பூன்

பச்சை மிளகாய்                 2

கொத்தமல்லி இலை      சிறிதளவு

சர்க்கரை                                2 டீஸ்பூன்

முந்திரி                                    10

வத்தல் பொடி                       2 டீஸ்பூன்

என்னை                                   1/2 லிட்டர்

உப்பு                                         தேவையான அளவு

 

செய்முறை

 

  • முதலில் முந்திரிப்பருப்பை பொடியாக நறுக்கி வைக்கவும்.

 

  • கடலை மாவுடன் நறுக்கிய முந்திரிப் பருப்பை சேர்த்து மஞ்சள் பொடி வத்தல் பொடி கொத்தமல்லி இலை தண்ணீர் சர்க்கரை பச்சைமிளகாய் உப்பு புளிக்கரைசல் அனைத்தும் சேர்த்துகட்டி பிடிக்காமல் நன்றாக கரைத்துக் கொள்ளவும்.

 

  • பின்னர் சிறிது எண்ணெயை கடாயில் ஊற்றி எண்ணெய் சூடானதும் கலக்கி வைத்துள்ள கடலை மாவை அதனுடன் சேர்த்து சுமார் 15 நிமிடங்கள் கிளறிக் கொண்டே இருக்கவும்.

 

  • மாவு கலவை கட்டி பிடித்ததும் இறக்கிவிடவும்.

 

  • பின்னர் குழிதட்டில் எண்ணெய் தடவி இறக்கிய கடலைமாவு கலவையை சமமாகப் உத்தவும்.

 

  • பின்னர் மூடி வைத்து சிறிது நேரம் கழித்து வெந்தவுடன் ஆறவைத்து சதுர வடிவில் வெட்டிக் கொள்ளவும்.

 

  • இறுதியாக பொரிக்க தேவையான அளவு எண்ணெயை கடாயில் ஊற்றி எண்ணெய் சூடானதும் சதுரவடிவில் வெட்டி வைத்துள்ள பர்ஃபியை  போட்டு பொன்னிறமாகும் வரை காத்திருந்து பொரித்து எடுக்கவும்.

 

  • இப்பொது சுவைமிக்க கடலைமாவு பர்ஃபி தயார்

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |