தேவையான பொருட்கள்
- பச்சரிசி – 2 கப்
- பாசிப்பருப்பு – 1/2 கப்
- நெய் – 4 டீஸ்பூன்
- கேசரி கலர் பொடி – சிறிதளவு
- முந்திரி – 2 டேபிள் ஸ்பூன்
- கிஸ்மிஸ் பழம் – 10
- குங்குமப்பூ – சிறிதளவு
- ஏலக்காய் பொடி – ஒரு டீஸ்பூன்
- சர்க்கரை – 2 கப்
செய்முறை
முதலில் அரிசி மற்றும் பருப்பை தனித்தனியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
பாத்திரம் ஒன்றில் அரை கப் தண்ணீர் வைத்து அதில் சர்க்கரையை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.
கொதித்து கெட்டியானதும் வேக வைத்த சாதம் மற்றும் பருப்பு உடன் கேசரி கலர் பொடி, நெய், ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
சிறிது நேரம் கழித்து இறக்கி விடவும்.
இறுதியாக முந்திரி மற்றும் கிஸ்மிஸ் பழத்தை நெய்யில் வறுத்து மேலே தூவி விட்டு ஒரு கிளறு கிளறி பரிமாறவும்.
சுவைமிக்க ஆந்திரா சர்க்கரை பொங்கல் தயார்.