தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. அதன்படி கொரோனா நிவாரண தொகை 4000 ரூபாய் இரண்டு தவணையாக பிரிக்கப்பட்டு கடந்த இரண்டு மாதங்களாக வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கூட்டுறவு, உணவு பொருள் வழங்கல் ஆகிய துறைகளின் கீழ் செயல்படும் நியாயவிலைக் கடைகளை ஒரே துறையின் கீழ் கொண்டு வருவது குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார். அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கவும், தரத்தை உறுதி செய்யவும் குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்த விண்ணப்பங்கள் மீது காலதாமதமின்றி நடவடிக்கை எடுத்து புதிய அட்டவணைகளை வழங்கவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.