ஸ்வீட் பொட்டேட்டோ நட்ஸ் மில்க் ஷேக்
தேவையான பொருட்கள் :
சர்க்கரைவள்ளிக் கிழங்கு – 1
நாட்டுச் சர்க்கரை – தேவையான அளவு
பால் – 200 மில்லி
பாதாம், பிஸ்தா, முந்திரி, வால்நட் – தேவையான அளவு
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு
செய்முறை:
முதலில் சர்க்கரைவள்ளிக் கிழங்கை வேகவைத்துத் தோல் நீக்கி, மசித்து கொள்ளவேண்டும் .பின் பிஸ்தா, பாதாம், முந்திரி, வால்நட் ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்துப் பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும் . இந்த பொடியை சர்க்கரைவள்ளிக் கிழங்குடன் சேர்த்து பிசைந்து பால், நாட்டுச் சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து மிக்ஸியில் நுரை பொங்க அடித்துப் பரிமாறினால் சூப்பரான ஸ்வீட் பொட்டேட்டோ மில்க் ஷேக் தயார் !!!