Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

புகையும் இல்லை….. இரைச்சலும் இல்லை…. கூச்சலின் இனிமையை….. கேட்டு ரசிக்கும் கிராம மக்கள்….!!

ஈரோட்டில் கெட்டி சமுத்திரம் ஏரியில் வெளிநாட்டு பறவைகள் குவிந்து இனிமையாக கூச்சலிட்டு வருவதை அப்பகுதி மக்கள் கேட்டு ரசித்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியை அடுத்த பர்கூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள கெட்டி சமுத்திரம் ஏரியானது சுமார் 200 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இது சமீபத்தில் 9 ஆண்டுக்கு பின் முழு கொள்ளவை எட்டியது. இதை எண்ணி அப்பகுதி மக்கள் சந்தோஷம் அடைந்தனர். வெளிநாட்டு பறவையான செங்கல் நாரை உள்ளிட்டவை ஏப்ரல் மாதத்தில் இனப்பெருக்கத்திற்காக ஏரியை வந்தடையும். அந்த வகையில்,

இந்த வருடமும் வெளிநாட்டு பறவையான செங்கல் நாரை ஏரிக்கரைக்கு வந்தது. அதேபோல் நீர் வாத்து , கொக்கு நாரை போன்ற பறவைகளும் ஏரியில் குவிந்தவண்ணம் உள்ளன. இந்த பறவைகள் அதே ஏரியில் உள்ள மீன்களை உட்கொண்டு காலை முதல் மாலை வரை தண்ணீரில் நீந்தி விட்டு பின் அங்குள்ள மரங்களில் மாலை நேரத்தில் தஞ்சம் அடைந்து விடுகின்றனர். வாகன இரைச்சல்,  நெரிசல் இல்லாமல் அமைதியாக இருக்கும் இந்த சூழ்நிலையில் பறவைகளின் கூச்சல் சத்தம் அப்பகுதி மக்களுக்கு இனிமையாக இருக்கிறது. 

Categories

Tech |