Categories
தேசிய செய்திகள்

Swiggy நிறுவன ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்….வெளியான மாஸ் அறிவிப்பு…!!!!

Swiggy நிறுவன ஊழியர்களுக்கு  சூப்பர் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. 

இந்தியா தொழில்நுட்ப வளர்ச்சியில் உயர்ந்து கொண்டே செல்கிறது. மேலும் இந்த தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது உணவு டெலிவரி நிறுவனங்கள். இந்நிலையில் இந்தியாவில் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் நிறுவனங்கள் இருந்தாலும், முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருப்பது ஸ்விக்கி நிறுவனம் தான். அவ்வாறு சிவப்பு, ஆரஞ்சு, கறுப்பு வண்ண உடைகளில் உணவு பெட்டிகளை சுமந்து கொண்டு மூச்சு விட முடியாத வாகன நெருக்கடியில் நகர சாலைகளில் குறுக்கும் நெடுக்குமாக, காற்றாய் பறந்து, வாடிக்கையாளர்களுக்கு சுடச்சுட உணவுகளை கொடுத்து வருகிறார்கள். இவ்வாறு டெலிவரி பாய்ஸ் என்று நுகர்வோரால் அழைக்கப்படும் இவ்வூழியர்களின் ஒரு நாள் உழைப்பு, சக்கரமாக சாலையில் தேய்ந்து ஓய்கிறது.

இந்நிலையில் கொரோனா காலகட்டத்திலும் இவர்களின் சேவையானது  தடை படவில்லை. இதனால் ஸ்விக்கி நிறுவனத்தில் லட்சக்கணக்கான டெலிவரி ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். இதே போல், ஸ்விக்கி டெலிவரி ஊழியர்களுக்கு நிரந்தர சம்பளம் வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இதையடுத்து இந்த கோரிக்கைக்கு செவிசாய்த்து ஸ்விக்கி நிறுவனம் நேற்று புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இதுகுறித்து ஸ்விக்கி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெலிவரி ஊழியர்கள்தான் எங்கள் முதுகெலும்பு, நாடு முழுவதும் 2.7 லட்சம் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு வருமானம் ஏற்படுத்தி தந்ததை எண்ணி பெருமைபடுகிறோம்.

இந்நிலையில், ஸ்விக்கி Step Ahead என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி, புளூ காலர் வேலையை வொய்ட் காலராக மாற்றி நிர்வாக பொறுப்புகளுக்கு வர விரும்பும் ஊழியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் நிர்வாக பொறுப்புகளுக்கு வருவதற்கு டெலிவரி ஊழியர்களிடம் டிகிரி, கணினி அறிவு, ஆங்கில மொழி திறன் மற்றும் ஸ்விக்கியில் சில ஆண்டு வேலை அனுபவம் ஆகியவை இருத்தல் வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.

Categories

Tech |