Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“Swiggy” மூலம் கஞ்சா கடத்திய பெண்… சுற்றிவளைத்த போலீசார்…!!

ஸ்விகியில் உணவு டெலிவரி செய்வது போல் கஞ்சா கடத்திய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை கிண்டியை சுற்றியுள்ள பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிண்டி காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் தனிப்படை அமைத்து, கிண்டி, வேளச்சேரி சாலையில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகப்படும் வகையில் அந்த வழியே இருசக்கர வாகனத்தில் உணவு டெலிவரி செய்ய வந்த ஒரு பெண்ணை மடக்கி சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்பெண் கொண்டு வந்த பையில், சுமார் 3 கிலோ கஞ்சா இருந்துள்ளது. இதனால் அந்தப் பெண்ணை காவல் துறையினர் கைது செய்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் அந்தப் பெண் மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த வனிதா (32) என்பது தெரியவந்தது. வனிதா என்பவர் பகுதி நேர டிரைவராகவும், மேலும் ஸ்விகியில் உணவு டெலிவரி செய்பவராகவும் பணியாற்றி வந்துள்ளார். கால் டாக்ஸி டிரைவராக செல்லும்போது வனிதாவிற்கு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, கஞ்சா சப்ளை செய்யும் தொழிலில் ஈடுபட தொடங்கியது தெரியவந்தது.மேலும், ஸ்விகியில் உணவு டெலிவரி செய்வதுபோல் கஞ்சாவை மறைத்துக்கொண்டு போனால் போலீசாருக்கு சந்தேகம் எதுவும் வராமல் இருக்கும் என்ற காரணத்தால் இந்த முறையில் இவர் கஞ்சா கடத்தியுள்ளார்.

மேலும், வனிதா கோயம்பேடு பகுதியிலிருந்து கஞ்சா வாங்கி வந்து வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து  வந்ததாகவும், இதேபோல் கிண்டியில் சப்ளை செய்ய போகும்போது காவல் துறையினரிடம் சிக்கியதும் விசாரணையின்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிடிபட்ட வனிதாவிடம் இருந்து இரண்டு செல்போன்கள், 500 ரூபாய் பணம், மூன்று கிலோ கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |