Categories
உலக செய்திகள்

அரசின் நலத்திட்டங்களை ஒதுக்கும் வெளிநாட்டவர்கள்…. காரணமாக அமையும் புதிய சட்டம்…. வெளியாகியுள்ள முக்கிய தகவல்….!!

சுவிட்சர்லாந்தில் வாழும் வெளிநாட்டவர்கள் 2019 இல் அந்நாட்டில் வந்த சட்டத்தை தொடர்ந்து அரசு வழங்கும் நலத்திட்டங்களை தவிர்த்து வருகிறார்கள்.

சுவிட்சர்லாந்து நாட்டில் 2019 ஆம் ஆண்டு புதிய சட்டம் ஒன்று இயற்றப்பட்டுள்ளது. அதாவது ஸ்விட்சர்லாந்திலுள்ள பெடரல் சட்டத்தின் 63வது பிரிவின்படி வெளிநாட்டவர்கள் அந்நாட்டில் வாழ்வதற்கான உரிமைகளைப் பறிப்பது தொடர்பான சட்டத்தை பிறப்பித்துள்ளது. இதனால் சுமார் 4000 பேர் சுவிட்சர்லாந்தில் வாழும் உரிமையை இழந்துள்ளார்கள்.

இவர்கள் சுவிட்சர்லாந்து அரசின் நலத்திட்டங்களை பெறுவதினால் வாழிட உரிமையை இழந்தவர்கள் அல்ல என்றாலும் கூட அங்கு வாழும் மற்ற வெளிநாட்டவர்களிடையே அரசின் நல உதவிகளை பெற்றுக்கொண்டால் நாம் வாழிட உரிமையை இழந்து விடுவோம் என்ற அச்சம் எழுந்துள்ளது. ஆகையினால் அங்கு வாழும் வெளிநாட்டவர்கள் அரசின் நலத்திட்டங்கள் கோரி எந்தவிதமான விண்ணப்பமும் கொடுப்பதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |