Categories
உலக செய்திகள்

சுவிட்சர்லாந்து அரசு வெளியிட்ட அறிவிப்பு.. தனிமைப்படுத்துதல் பட்டியலில் சேர்க்கப்பட்ட நாடு..!!

சுவிட்சர்லாந்து, தனிமைப்படுத்துதல் பட்டியலில் தற்போது பிரிட்டன் நாட்டையும் சேர்த்திருப்பதாக அறிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்து அரசு, நேற்று மாலை ஆறு மணியிலிருந்து, பிரிட்டன் மக்கள் தங்கள் நாட்டிற்கு வந்தால் சுமார் பத்து தினங்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது. அதாவது தற்போது உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் பரவிவருவதால் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரிட்டன் மக்கள் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் முழுமையாக செலுத்தி கொண்டிருந்தாலும் கூட, கட்டாயமாக 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |