Categories
உலக செய்திகள்

பல இன்னல்களை அனுபவித்த சுவிஸ் பெண்…. கொரோனாவால் பாதிக்கப்பட்ட பின் நடந்த சோகம்….!!

சுவிட்சர்லாந்தை சேர்ந்த பெண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பின் மறதி நோயால் தான் அனுபவித்த இன்னல்களை பகிர்ந்துள்ளார்.

ஸ்விட்சர்லாந்திலுள்ள ஆர்காவ் மாநிலத்தில் 33 வயதான பீட்ரைஸ் என்னும் பெண்மணி வசித்து வந்துள்ளார். இவர் கடந்த செப்டம்பர் மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதில் இருந்து மீண்ட அவர் அடுத்தபடியாக மறதி நோயால் மிகவும் அவதிப்பட்டு பல இன்னல்களை அனுபவித்துள்ளார்.

அதாவது தான் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை கூட எழுதி வைக்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. இவருக்கு ஏற்பட்ட இந்த மறதி நோயால் அவர் வேலை செய்த நிர்வாகம் அவரை வேலையில் இருந்து நீக்கியுள்ளது. அதன்பின் அந்த நிறுவனமே அவருடைய சிகிச்சைக்கு உதவி செய்ததால் அவர் மறதி நோயிலிருந்து வெளியே வந்ததாக பீட்ரைஸ் தான் அனுபவித்த இன்னல்களை வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |