சுவிட்ஸர்லாந்து அரசு வெளிநாட்டில் வாழும் தங்கள் குடிமக்களை கைவிடுவதாக மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
சுவிற்சர்லாந்தின் அனைத்து பகுதிகளிலும் தீவிரமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதில் மக்கள் பலரும் காத்திருக்காமல் வேறு மாநிலங்களுக்குச் சென்று முறைகேடாக தடுப்புபூசி செலுத்தி கொள்கின்றனர். எனினும் நாட்டில் மருத்துவக்காப்பீடு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இந்நிலையில் சுவிற்சர்லாந்தை சேர்ந்த வயதான தம்பதி தாய்லாந்தில் பல வருடங்களாக வாழ்ந்து வருகின்றனர். எனினும் தங்கள் நாட்டிற்கு அடிக்கடி சென்று வருவார்களாம். இந்நிலையில் அவர்களுக்கு மருத்துவ காப்பீடு இல்லாத காரணத்தால் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முடியவில்லை.
எனவே ஒரு நண்பரின் குடும்ப மருத்துவர் மூலம் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். சுவிட்ஸர்லாந்தின் இந்த நடவடிக்கையால் தான் நாங்கள் இவ்வாறு முறைகேடாக தடுப்பூசி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது என்று வருத்ததத்துடன் கூறுகின்றனர். சுவிட்ஸர்லாந்தின் சுகாதாரத்துறை பிற நாடுகளில் வாழும் தங்கள் குடிமக்களுக்கு தடுப்பூசி செலுத்த மறுத்துவிடுகிறது. ஆனால் ஜெர்மனியில் மருத்துவ காப்பீடின்றி அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.