ஸ்விட்சர்லாந்து நாட்டில் மற்ற அகதிகளை விட உக்ரைன் அகதிகளுக்கு இரு மடங்கு குறைந்த அளவு நிதி உதவிகள் கிடைப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் காரணத்தினால் உக்ரைன் மக்கள் அகதிகளாக உலக நாடுகளுக்கு தஞ்சம் புகுந்து வருகின்றனர். அந்த வகையில் ஸ்விட்சர்லாந்து நாட்டிற்கும் உக்ரைன் மக்கள் அகதிகளாகி வருகின்றனர். இந்த நிலையில் சுவிட்சர்லாந்துக்கு உக்ரைனில் இருந்து வரும் அகதிகள் வரவும் அங்கு பணி செய்யவும் S விசா அளிக்கப்படுகிறது. இதனால் உக்ரைன் அகதிகளுக்கு அந்நாட்டில் பாரபட்சம் காட்டுவதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.
மேலும் அந்நாட்டில் அகதிகளுக்கு பொதுவாக வழங்கப்படும் நிதி உதவியில் பாதிக்கும் குறைவான தொகையே உக்ரைன் அகதிகளுக்கு அளிக்கப்படுகிறது. அதாவது ஸ்விட்சர்லாந்தில் நாட்டிற்கு ஒரு பெண் இரண்டு பிள்ளைகளுடன் அகதிகளாக வரும்பது அவருக்கு மாதம் ஒன்றிற்கு உணவு, சோப் முதலான பொருட்கள், உடை மற்றும் போக்குவரத்துக்காக 1800 சுவிஸ் ஃப்ராங்குகள் அழிக்கப்படுகிறது. அதே சமயம் அவர் உக்ரைன் அகதிகளாக இருந்தாள் அவருக்கு வெறும் 865 சுவிஸ் ஃப்ராங்குகள் மட்டுமே கொடுக்கப்படுகிறது.
இந்த பாரபட்சமான நடவடிக்கையை அரசியல்வாதிகள் பலர் விமர்சித்துள்ளார்கள். UDC/SVP கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான Andreas Glarner அகதிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவி சொற்பத் தொகையை. அவர்கள் உண்மையான அகதிகள் என்றும் நன்றாக நடத்தப்பட்டு அந்த தொகையை அதிகரிக்க வேண்டும்” என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.