பிரிட்டன் தடுப்பூசியை சுவிட்சர்லாந்து அரசாங்கம் விற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி பல நாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் பிரிட்டன் தயாரிப்பாளர் பிரிட்டன் அஸ்ட்ராஜெனாகா தடுப்பூசி தொடர்பில் சுவிச்சர்லாந்துக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து பிரிட்டன் தடுப்பூசியை சுவிஸ் மருத்துவ நிர்வாகம் ஆய்வு செய்து வருகிறது.
ஆனால் இதுவரை ஒப்புதல் அளிக்க தாமதப்படுத்தி வருகிறது. இந்நிலையில் அஸ்ராஜெனகா சார்பில் சுவிட்சர்லாந்துக்கு 7வது தொகுப்பு மிக விரைவில் வந்து சேர உள்ளது. ஆனால் தற்போது 5.3 மில்லியன் டோஸ் மருந்துகளை சுவிஸ் நிர்வாகம் விற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே சுவிஸ் மருத்துவ நிர்வாகம் ஒப்புதல் அளித்ததும் தடுப்பூசி செலுத்துவதற்கு தயாராக இருப்பதாக அஸ்ட்ராஜெனகா அறிவித்துள்ளது.