சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றும் உறுப்பினர் ஒருவர் உயரமான கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள சுவிஸ் தூதரகத்தின் முதல் செயலாளராக பெண் தூதர் ஒருவர் இருந்துள்ளார். அவர் இன்று காலை அவர் வசித்துவந்த மிக உயரமான கட்டிடத்தில் இருந்து விழுந்து இறந்து கிடந்துள்ளார். அதன்பின் ஒரு தூதரக ஊழியர் அவரை பார்ப்பதற்காக அவரது குடியிருப்புக்கு வந்துள்ளார். ஆனால் அவர் எங்கு தேடியும் இல்லாததால் அவரது தோட்டக்காரரிடம் இது குறித்து அவர் கூறியுள்ளார்.
அதன்பின் தோட்டக்காரர் அருகிலுள்ள சுற்றுப்புறங்களில் அவரை தேடி பார்த்துள்ளார். அப்போது தோட்டத்திலிருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஈரானிய அவசர சேவை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் இது ஒரு விபத்து என சுவிஸ் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. மேலும் தரவுப் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை காரணங்களை சுட்டிக்காட்டி அவரது மரணத்தின் சூழ்நிலை குறித்து எந்தவித தகவலும் வெளியிடவில்லை.