பிரான்சில் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் ஸ்விட்சர்லாந்து விமானம் தவறுதலாக புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சுவிட்சர்லாந்து நாட்டின் உள்துறை அமைச்சராக இருக்கும் Alain Berset, ஒரு சிறிய வகை விமானத்தில் பயணித்திருக்கிறார். ஸ்விட்சர்லாந்தில் இருந்து சென்று அந்த விமானம் பிரான்ஸ் நாட்டின் ஒரு ராணுவ தளத்திற்குள் இருக்கும் தடை செய்யப்பட்ட பகுதியில் புகுந்தது.
உடனடியாக அந்த விமானத்தை பிரான்ஸ் விமான படையினர் தரையிறக்க செய்தனர். அதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், உள்துறை அமைச்சர், தெரியாமல் தடை செய்யப்பட்ட பகுதியில் புகுந்தது தெரிய வந்திருக்கிறது. அதன்பிறகு பிரான்ஸ் அதிகாரிகள் அவர் பயணம் மேற்கொள்ள அனுமதித்துள்ளனர்.