Categories
உலக செய்திகள்

குழாய்கள் அமைக்கும்போது கண்டுபிடிக்கப்பட்ட ரகசியம்…. 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராமம்…. ஆச்சரியத்தில் ஆழ்த்தும் சுவிஸ்….!!

ஏறியின் கீழ் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு கிராமத்தை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஸ்விட்சர்லாந்தில் lucerne ஏரியின் கீழ் ஒரு கிராமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கிராமம் மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என தெரியவந்துள்ளது. இந்த ஏரியின் கீழ் இயற்கை துறைமுகப் பகுதியின் கீழ் குழாய்கள் பதிக்கும் பணியின்போது இந்த கிராமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கிராமம் தண்ணீர் மட்டத்திலிருந்து 4 அடி ஆழத்தில் இருப்பதாக தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

முன்னதாகவே அந்த இடத்தில் ஒரு கிராமம் உண்டு என்பதை அழிந்த ஆய்வாளர்கள் அதற்கான ஆதாரத்தை தேடிக் கொண்டிருக்கின்றனர். மேலும் ஏரியின் அடியில் பெருமளவு செறு நிரம்பி இருப்பதால் ஆதாரங்களைத் திரட்ட தடை ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். தற்போது குழாய்கள் அமைக்கும் பணிக்காக ஏரிக்கரையில் தோண்டப்படும் போது வீடுகள் அமைக்க பயன்பட்ட முப்பது பொருட்களும் ஐந்து பானைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த கண்டுபிடிப்புகள் அனைத்துமே lucerne ஏரியின் அடியில் ஒரு கிராமம் இருப்பதை உறுதிபடுத்துகிறது.

Categories

Tech |