உலக வர்த்தக அமைப்பின் தலைவர் Ngozi Okonjo-Iweala-விடம் சுவிட்சர்லாந்து பத்திரிக்கைகள் மன்னிப்பு கேட்டுள்ளது.
Ngozi Okonjo-Iweala என்ற 66 வயது கருப்பினப் பெண் உலக வர்த்தக அமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் இந்த வயதானவர் தான் உலக வர்த்தக அமைப்பின் தலைவர் என்று கேலி செய்து சுவிட்சர்லாந்து பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டது. Ngozi Okonjo-Iweala நைஜீரியாவில் நிதி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் பதவியிலிருந்தவர். மேலும் இவர் உலக வங்கியில் 25 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் மிகுந்த பொருளாதார நிபுணர் ஆவார்.
ஆனால் இவ்வளவு அனுபவம் வாய்ந்த Ngozi-யை பத்திரிக்கைகள் அப்படி மோசமாக செய்தி வெளியிட்டதால் , ஐக்கிய நாடு ஏஜென்சிகளின் பெண் தலைவர்களும், 124 பெண் தூதர்களும் அந்தப் பத்திரிகையின் மீது புகார் ஒன்றை அளித்தனர். அதனால் தனது தவறை உணர்ந்த அந்த பத்திரிக்கை Ngozi-யிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. இந்நிலையில் Ngozi, பத்திரிக்கைகள் சரியான நேரத்தில் தான் மன்னிப்பு கேட்டுள்ளது என்று கூறி அதை வரவேற்றுள்ளார். மேலும் எனக்காக குரல் கொடுத்த சகோதரிகள்,தலைவர்கள் மற்றும் தூதர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
I’m thankful to all my sisters, UN Women Leaders and the 124 Ambassadors in Geneva who signed the petition on calling out the racist & sexist remarks in this newspaper. It is important & timely that they’ve apologized. @phumzileunwomen, @Winnie_Byanyima pic.twitter.com/pyz1TQ3tKA
— Ngozi Okonjo-Iweala (@NOIweala) February 28, 2021