சுவிட்சர்லாந்து அரசு மருத்துவக் கருவிகளை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
சுவிட்சர்லாந்திலிருந்து, கொரோனா ஆண்டிஜன் சோதனை கருவிகள் அரை மில்லியன், வென்டிலேட்டர்கள் 50, பரிசோதனை உபகரணங்கள் 3.5 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் மதிப்புடையது, ஆக்சிஜன் உருவாக்கக்கூடிய கருவிகள் 150 போன்றவை இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொழும்பிற்கு, கடந்த திங்கட்கிழமை அன்று சுமார் 16 டன் மருத்துவ கருவிகள் சூரிச்சிலிருந்து, ஒரு விமானத்தின் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.