சுவிட்சர்லாந்திலிருந்து பிரித்தானியாவிற்கு வரும் பயணிகள் என்னென்ன பொருட்களை தங்களுடன் எடுத்துச் செல்லலாம் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சுவிட்சர்லாந்திலிருந்து பிரித்தானியாவிற்கு வரும் பயணிகள் தங்களுடன் மீன், மாமிசம் உள்ளிட்ட பொருள்களை எடுத்துச் செல்வதற்கான விதிகள் தற்போது தளர்த்தப்பட்டுள்ளது. மேலும் பிரித்தானியாவிற்கு வரும் பயணிகள் தங்களது தனிப்பட்ட தேவைகளுக்காக கொண்டு வரும் பொருட்களுக்கு எந்த விதமான கட்டுப்பாடுகளும் கிடையாது. அதேசமயம் பயணிகள் 400 கிலோ சாசேஜ்களை தங்களுடன் கொண்டு வந்தால் கட்டாயம் கேள்விகள் எழுப்பப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் ஐரோப்பிய ஒன்றியம் அல்லது சுவிட்சர்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே, கிரீன்லாந்து, Faroe, Liechtenstein தீவுகள் உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் மீன், மாமிசம் உள்ளிட்ட பொருள்களை எடுத்து வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சுவிஸ் மதுபானங்களை நண்பர்களுக்கோ அல்லது குடும்பத்தினருக்கோ பரிசாக கொடுப்பதற்காக பிரித்தானியாவிற்கு கொண்டுவர விரும்புவோர் சுவிட்சர்லாந்திலிருந்து தாராளமாக மதுபானங்களை எடுத்து வரலாம். இருப்பினும் மதுபானத்தை எந்த அளவு பிரித்தானியாவிற்கு கொண்டு செல்ல முடியும் என்பதற்கான வரையறைகளை அறிந்து கொண்ட பிறகு எடுத்து செல்வது அவசியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.