சுவிட்சர்லாந்தில் கொரோனாவின் 2ம் அலை காரணமாக சில நன்மைகள் ஏற்பட்டுள்ளதாக வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
உலகில் கொரானா வைரஸ் பரவ தொடங்கி ஒரு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக சுவிட்சர்லாந்தில் 65 வயது மேற்பட்ட மூத்த குடிமக்கள் அதிகளவு உயிரிழந்தனர். இந்த இரண்டாவது அலை காலகட்டத்தில் புள்ளிவிவரங்களின் அடிப்படையில், எதிர்பார்த்ததை விட அதிக மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனாவின் இரண்டாவது அலையால் சில நன்மைகள் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.
அது என்னவென்றால், கடந்த ஆண்டுகளை விட நடப்பு ஆண்டின் பிப்ரவரி மாதத்தின் முதல் 3 வாரங்களில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் குறைவான மக்களே உயிரிழந்ததாக பெடரல் புள்ளிவிவர வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த குறைவான உயிரிழப்பிற்கு காரணம் பெடரல் கவுன்சில் செயல்படுத்திய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தான் என்று வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
மக்களுக்கு காய்ச்சல் போன்ற நோய்கள் பரவாமல் இருப்பதற்கு காரணமும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை தான். மேலும் சுவாச நோய், வயிற்றுப்போக்கு போன்ற நோய்களால் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு குறைவான குழந்தைகளே பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.