Categories
உலக செய்திகள்

“தீவிரவாதியுடன் வாழ இனி பழகிக்கிடனும்”… சுவிட்சர்லாந்து நிர்வாகத்தின் அதிர்ச்சி முடிவு… பயத்தில் பொதுமக்கள்…!!

ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளருக்கு சுவிட்சர்லாந்து நிர்வாகம் அடைக்கலம் கொடுத்துள்ளது.  

ஈராக் நாட்டை சேர்ந்தவர் 37 வயதான வெசாம் என்ற நபர் தீவிர வாத ஐஎஸ் அமைப்பின் ஆதரவாளராக உள்ளார். மேலும் அவர்  தனது பேஸ்புக் பக்கத்தில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பினருக்கு  ஆதரவு தெரிவித்து பல சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் காணொளிகளையும் வெளியிட்டுள்ளார். இதனால் குற்றவியல் நீதிமன்றம் அவருக்கு 2016ஆம் ஆண்டில் இருந்து 3 ஆண்டுகள் 6 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்தது.

ஐஎஸ் தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவாக செயல்பட்டதற்காகவும், கடத்தல் போன்ற குற்றச்செயல்களில் வெசாம்  ஈடுபட்டதாகவும் நீதிமன்றம் அவருக்கு சிறை தண்டனையை வழங்கியது. மேலும் அவரது அடைக்கல கோரிக்கையும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில்  வெசாம் தனது அடைக்கல கோரிக்கையை ரத்து செய்ததற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு  ஒன்றை தொடர்ந்தார்.

அதனை விசாரித்த நீதிபதி, வெசாமின் அடைக்கலக்  கோரிக்கையை ஏற்பதாக கூறியுள்ளார். மேலும் வெசாம்        சுவிட்சர்லாந்தில் வாழலாம் என்றும் தீர்ப்பளித்தார். எஸ்.வி.பி தேசிய கவுன்சிலர் Roland Rino Buchel இந்த முடிவிற்கு  தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.  மேலும் அவர் , “இனி சுவிட்சர்லாந்தின் பொதுமக்கள் ஒரு தீவிரவாதியுடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும்” என்று விமர்சித்துள்ளார்.

Categories

Tech |