Categories
உலக செய்திகள்

பயணிகள் உரிமையில் மாற்றம்…. அமலுக்கு வந்த நாள் முதல்…. இழப்பீடு கேட்டு குவிந்த மனுக்கள்….!!

பயணிகள் உரிமையில் பொதுப் போக்குவரத்து துறை ஒரு மாற்றத்தை கொண்டு வந்துள்ளதால் சுவிட்சேர்லந்தில் இழப்பீடு கேட்டு மனுக்கள் குவிந்துள்ளது.  

ஸ்விட்சர்லாந்து பொதுப் போக்குவரத்து துறை பயணிகள் உரிமையில் ஒரு புதிய மாற்றத்தை செய்துள்ளது. இந்த புதிய மாற்றமானது கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனையடுத்து அந்த மாற்றம் அமலுக்கு கொண்டு வரப்பட்ட நாள் முதல் கடந்த ஜூன் மாதம் வரையிலான கால கட்டங்களுக்கு இடையில் 8600 மனுக்கள் இழப்பீடு கேட்டு போக்குவரத்து நிறுவனத்திடம் குவிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து பயணிகள் பொதுப் போக்குவரத்தில் தங்களுக்கான நிறுத்தத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேல் காத்திருக்க நேரிட்டால் அவர்களுக்கு 25% இழப்பீடு அளிக்கப்படுகிறது.

மேலும் இரண்டு மணி நேரத்திற்கு அதிகமாக காத்திருக்க நேரிட்டால் அவர்கள் வாங்கிய பயண சீட்டில் இருந்து 50% மேல் இழப்பீடு அளிக்கப்படுகிறது. இதற்கிடையில் தற்போது குவிந்துள்ள மனுக்களில் 79% மனுக்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளும் வகையில் அமைந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து பொதுப் போக்குவரத்துத் துறை 60 நிமிடம் அல்லது அதற்கு மேற்பட்ட  தாமதத்தினால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு 24,000 பிராங்குகள் இழப்பீடு வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |