சுவிட்சர்லாந்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்க கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
சுவிட்சர்லாந்து நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு மேலும் அழுத்தம் கொடுக்கவேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வருகிறது. இந்த கருத்துக்கு பலரும் ஆதரித்து வந்த நிலையில், தற்போது பெடரல் கொரோனா கட்டுப்பாட்டு அமைப்பில் உள்ள ஒருவரும் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், பெடரல் கொரோனா கட்டுப்பாட்டு அமைப்பின் பொருளாதார பேராசிரியர் Marius Brülhart என்பவர் தான் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று கூறினார். அதுமட்டுமின்றி, தடுப்பூசி செலுத்தாதவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் பட்சத்தில், சிகிச்சைக்கான செலவில் பெரும்பகுதியை அவர்கள் தான் ஏற்கவேண்டும் என்றும் கூறினார்.
அந்த வகையில், தடுப்பூசி செலுத்த விரும்பாதவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அபாயம் அதிகம் உள்ளது. எனவே, அவர்கள் மருத்துவ காப்பீட்டுக்கு கூடுதல் கட்டணம் செலுத்தவேண்டும் என்றார். மேலும், இந்த மாதிரியான நடைமுறைகள் சிங்கப்பூரில் ஏற்கனவே அமலில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.