Categories
உலக செய்திகள்

போலீசாருக்கு வந்த அழைப்பு…. இரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்…. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்….!!

ஸ்விட்சர்லாந்தில் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்விட்சர்லாந்தில் உள்ள சூரிச் மாகாணத்தில் 30 வயதுடைய பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு தன்னை யாரோ கத்தியால் குத்தி விட்டதாக அப்பெண் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். இதனை அடுத்து உடனடியாக போலீசார் அவசர உதவி மருத்துவகுழுவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். அங்கு அப்பெண் கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மிதந்து கிடத்துள்ளார். இதனை தொடர்ந்து அப்பெண்ணிற்கு அவசர உதவி மருத்துவக்குழு சிகிச்சை அளித்துள்ளனர்.

ஆனால் அவர்களால் அப்பெண்ணை காப்பாற்ற முடியவில்லை. மேலும் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். அதிலும் அவர் கொலை செய்யப்பட்டதால் தான் உயிரிழந்தார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக சம்பவத்தை எவரேனும் நேரில் கண்டவர்கள் இருந்தால் உடனே போலீசாரிடம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Categories

Tech |