Categories
உலக செய்திகள்

‘மன ரீதியாக பாதிப்பு’…. சகோதரரை கொன்ற பெண்…. விசாரணை நடத்திய வழக்கறிஞர் அலுவலகம்….!!

சுவிட்சர்லாந்தில் தனது சகோதரரை கொன்ற பெண் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் உள்ள ஆர்காவ் பகுதியில் 26 வயதான பெண் தனது 25 வயது சகோதரரை கொலை செய்துவிட்டு அவரும் தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அரசு வழக்கறிஞர் அலுவலகம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அவர்கள் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் “26 வயதான பெண் ஒருவர் தனது சொந்த சகோதரரை  கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இதனையடுத்து அவரும் தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளார். இவர்கள் இருவரின் சடலங்களையும் கண்ட பெற்றோர்கள் உடனடியாக போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து இவர்கள் இருவரின் உடலும் ஒரே நேரத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.  மேலும் இவர்கள் இருவரின் இறப்பிற்கு நண்பர்களும் உறவினர்களும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர் “உண்மையில் நாம் மனதிற்குள்ளேயே அரக்கர்களும் பேய்களும் வாழ்கிறார்கள். சில நேரங்களில் அவர்கள்வெற்றி அடைகிறார்கள்” என்று ஸ்டீவன் ஹாக்கிங் எழுதிய நாவலில் உள்ள மேற்கோளை சுட்டிக்காட்டி கூறியுள்ளனர். குறிப்பாக தற்கொலை செய்து கொண்ட இளம்பெண் மனரீதியாக பாதிக்கப்பட்டவர் என்று அவரின் நண்பர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |