தந்தையும் மகளும் புத்திசாலித்தனமாக செயல்பட்டு 25 மாடுகளை தீவிபத்திலிருந்து பத்திரமாக மீட்டுள்ளனர்.
சுவிட்சர்லாந்து நாட்டின் Fribourg மாநிலத்தில் Châtel-St-Denis என்ற நகராட்சி பகுதி அமைந்துள்ளது. அந்த நகராட்சி பகுதியில் கடந்த வியாழக்கிழமை அன்று மாட்டுக்கொட்டகை ஒன்று தீடிரென தீப்பிடித்துள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதுக்குறித்து கிடைத்த தகவலின் பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை போராடி கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்த தீவிபத்து குறித்து எச்சரிக்கை மணி அடித்தும் அந்த மாட்டு கொட்டகைக்கு அருகில் மதுபான விடுதி நடத்தி வந்த தந்தையும் மகளும் புத்திசாலித்தனமாக செயல்பட்டு 25 மாடுகளை எவ்வித காயமும் இன்றி பத்திரமாக மீட்டுள்ளனர். ஆனால் இந்த தீவிபத்தில் மாட்டுக் கொட்டகை முழுவதுமாக தீயில் கருகி நாசமாகியுள்ளது. இந்த தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தந்தை மகளின் இந்த புத்திசாலித்தனமான செயலை கண்டு போலீசாரும் பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.