அகதிகளுக்கு வேலை கொடுத்த உணவகத்தின் மீது பல தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் பெர்ன் பகுதியில் Tenz Momo என்னும் திபெத்திய உணவகம் அமைந்துள்ளது. அந்த உணவகம் அகதிகளுக்கு உதவும் வகையில் வேலை கொடுத்துள்ளது. ஆனால் அகதிகளுக்கு எப்படி வேலை கொடுக்கலாம்? என பொதுமக்கள் பலரிடமிருந்து கேள்விகள் எழுந்துள்ளது. இதனையடுத்து போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய அதிரடி விசாரணையில் Tenz Momo உணவகம் அகதிகளுக்கு வேலை கொடுத்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் அந்த உணவகத்தில் ஏராளமான அகதிகள் பணியாற்றியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் 8 அகதிகளை போலீசார் அடையாளம் கண்டு உடனடியாக நாடு கடத்தும் மையங்களுக்கு பத்திரமாக அனுப்பி வைத்துள்ளனர். இந்த வழக்கு குறித்து Tenz Momo உணவகத்தின் நிர்வாகம் தற்போது வரை எந்தவித பதிலும் கூறவில்லை. இருப்பினும் Tenz Momo உணவகம் அகதிகளுக்கு வேலை கொடுத்ததன் மூலம் அவர்கள் தொழிலாளர்கள் சட்டத்தை மீறி உள்ளார்களா? என்று பல தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.