வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றுவிட்டு நாடு திரும்பும் மக்கள் மூலம் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகின்றது. அந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக ஊரடங்கு மற்றும் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் மூலம் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சுவிட்சர்லாந்திலும் கொரோனா தொற்று அதிதீவிரமாக பரவி வருகின்றது. இதற்கு காரணம் அந்நாட்டை சேர்ந்த மக்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றுவிட்டு நாடு திரும்புகின்றனர். இதனைத்தொடர்ந்து அங்கு கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்று Kosovo ஆகும். அந்த நாட்டிற்கு மக்கள் பலரும் சுற்றுலா சென்று வருகின்றனர். அதாவது Kosovo நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதும் நீக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில் ஐரோப்பியர்கள் அதிக அளவில் Kosovo நாட்டிற்கு சுற்றுலா செல்கின்றனர். அவ்வாறு Kosovo நாட்டிற்கு சுற்றுலா சென்று வந்த ஒருவர் கூறியதாவது ” Kosovo நாட்டில் Pristina என்னும் விமான நிலையம் அமைந்துள்ளது. அந்த விமான நிலையத்தில் போலி கொரோனா ஆதாரங்கள் எளிதாக வாங்க முடிகிறது” என கூறியுள்ளார். அந்த செய்தி அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதன்பின் அதிகாரிகள் kosovo நாட்டில் போலி சான்றிதழ்களை பெறுவது எளிது என்பதால் அங்கிருந்து சுவிட்சர்லாந்துக்கு திரும்பும் மக்கள் தங்களுக்கு கொரோனா இல்லை என போலியான ஆவணங்களை காண்பித்து நாட்டுக்குள் நுழைந்து விடுவார்கள் என கருதப்படுகிறது. அவ்வாறு வெளிநாடு சென்று நாடு திரும்புபவர்கள் மூலம் கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவும் அபாயமும் உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் சுற்றுலா சென்று நாடு திரும்பிய மக்களை தொடர்ந்துதான் சுவிட்சேர்லந்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிக அளவில் அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பலர் kosovo நாட்டிற்கு சுற்றுலா சென்று நாடு திரும்பியவர்கள்தான் என பெடரல் கொரோனா கட்டுப்பாடு அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சுவிஸ் சுகாதாரத்துறை அமைச்சர் Alain Berset கூறியதாவது “தொடர்ந்து அதிகரித்து வருகின்ற கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக வரும் கோடைக்காலத்தில் வெளிநாடு சென்று திரும்புவோருக்கு மீண்டும் தனிமைப்படுத்துதலை அமுல்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது” என தெரிவித்துள்ளார்.