Categories
உலக செய்திகள்

சுவிட்சர்லாந்தில் இரட்டைத்தலை ஆமை… புதிய வீடு அமைக்க திட்டம்…!!!

சுவிட்சர்லாந்தில் இரண்டு தலைகளை கொண்ட ஆமைக்கு புதிய வீடு ஒன்று அமைக்க திட்டமிட்டுள்ளனர்.

சுவிட்சர்லாந்தில் Janus என்று அழைக்கப்படும் இரண்டு தலைகளை கொண்ட ஆமை ஒன்று உள்ளது. அது 2 தலைகளை கொண்டிருப்பதால் மற்ற ஆமைகளை போன்று தன் தலைகளை ஓட்டுக்குள் இழுத்துக் கொள்ள முடியாது. அதனால் அந்த ஆமையை காட்டில் விட்டால் அதற்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்பதால், அதனை ஒரு அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாத்து வருகின்றனர். உலகிலேயே நீண்ட நாள் வாழக்கூடிய இந்த இரட்டைத் தலை ஆமைக்கு, ஜெனீவாவின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் ஒரு புதிய வீடு அமைத்துக் கொடுக்க திட்டமிட்டுள்ளனர்.

அந்த அருங்காட்சியகத்தில் தான் 23 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த ஆமை பிறந்துள்ளது. தற்போது அதன் உடல்நிலை சரியில்லாததால், அதனை கட்டிடத்தின் மேல் தளத்திற்கு மாற்றி, கவனித்துக் கொள்வதற்காக ஒரு காப்பாளர் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளார். இதற்கு முன்னதாக கஃபட்டேரியா ஒன்றின் அருகில் உள்ள பெரிய தொட்டியில் ஆமை பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த ஆமைக்கு புதிய தொட்டி ஒன்று உருவாக்கப்பட இருப்பதால், பார்வையாளர்கள் மீண்டும் அதனை கண்டுகளிக்கலாம்.

Categories

Tech |