சுவிட்சர்லாந்தில் அதிகமான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் சில பகுதிகள் அபாயமான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில், கடும் இடி மின்னலுடன் மழை பொழிந்து கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஆறுகள் ஏரிகள் முழு கொள்ளளவில் நிறைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Lucerne ஏரியின் கறைகள் உடையும் நிலையில் இருப்பதால் அச்சம் ஏற்பட்டிருக்கிறது. பெடரல் சுற்றுச்சூழல் அலுவலகமானது ஆபத்து அளவில் ஐந்தாம் மட்டத்தை அடைந்துவிட்டதாக கூறியிருக்கிறது.
இது நூறு வருடங்களுக்கு ஒரு தடவை நிரம்பக் கூடிய அளவு என்பது குறிப்பிடத்தக்கது. Oberkirch என்ற பகுதியும், கடும் பாதிப்படைந்துள்ளது. வெள்ளம் அதிகரித்து கிராமங்கள், நகரங்கள், ரயில் பாதைகள் என்று அனைத்து இடங்களையும் பாதித்திருக்கிறது.
Echt jetzt? #zürichsee pic.twitter.com/wJ9FYvwtZl
— Salome Woerlen (@WoerlenSalome) July 15, 2021
ஆபத்தான அளவில் Biel நதி இருக்கிறது. மேலும் இதன் நீர்மட்டம் உயரும் என்று அதிகாரிகள் கருதுகின்றனர். இது மட்டுமல்லாமல், சூரிச், Bern,Ligerz am Bielersee, Frauenthal an der Lorze, மற்றும் Spiez am Thunersee போன்ற பகுதிகளும் நான்காம் மட்ட ஆபத்தில் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்கள்.
பேஸலில் Rhine நதி அருகே கப்பல் போக்குவரத்துக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் அதிகமான பகுதிகளில் ரயில் சேவையும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நாட்டில் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் மேலும் மழை பொழியும் என்று கூறப்பட்டுள்ளது.