Categories
உலக செய்திகள்

அப்டி ஒரு பேச்சு, இப்டி ஒரு பேச்சு.. சுவிட்சர்லாந்து அமைச்சரின் பல்டி..!!

சுவிட்சர்லாந்தில் ஒரு அமைச்சர் கொரோனா பரிசோதனைகள் மக்களுக்கு கட்டணமில்லாமல் அளிக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

ஜெனீவா மாகாணத்தில் சுகாதாரத் துறையின் கவுன்சிலராக உள்ள Mauro Poggia, கட்டணம் இல்லாமல் கொரோனா பரிசோதனைகளை இலவசமாக அளிப்பதை நிறுத்த வேண்டும் என்றார். அப்போதுதான் இளைஞர்கள் அதிகமாக தடுப்பூசி செலுத்திக்கொள்வார்கள் என்றும்  கூறியுள்ளார்.

அதாவது, கொரோனா பரிசோதனைகள் மக்களுக்கு இலவசமாக அளிக்கப்படுவதால், நமக்கு கொரோனா தொற்று இல்லை என்று இருந்துவிடுகிறார்கள். தடுப்பூசி செலுத்திக்கொள்வதில்லை என்று கூறியிருக்கிறார். ஜெனிவா மாகாணத்தில் தான் தற்போது கொரனொ தொற்று அதிகமாக உள்ளது.

இந்நிலையில், Mauro Poggia கட்டணமில்லாமல் பரிசோதனைகளை இலவசமாக அளிக்க கூடாது என்று கூறியிருக்கிறார். ஆனால் இவர்தான் கடந்த மே மாதம், நாட்டு மக்களுக்கு கொரோனா  பரிசோதனைகள் கட்டணம் இல்லாமல் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |