சுவிட்ஸர்லாந்தின் சூரிச் நகரில் 500 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு அடிப்படை வருவாயாக குறிப்பிட்ட தொகை வழங்கப்படவுள்ளது.
சுவிட்ஸர்லாந்தின் குடிமக்களுக்கு அடிப்படை வருமானமாக குறிப்பிட்ட தொகையை அளிக்கும் திட்டம் குறித்த விவாதம் தொடர்ந்து வருகிறது. கடந்த 2014ம் வருடத்தில் இத்திட்டத்திற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது சுமார் 75 %மக்கள் இந்த திட்டத்தினை ஏற்கவில்லை.இதனால் அந்த திட்டம் கைவிடப்பட்டது.
எனினும் சூரிச் நகரில் நான்காவது மற்றும் ஐந்தாவது மாவட்டங்களில் இத்திட்டத்தை 54.7 சதவீதம் மக்கள் ஆதரித்துள்ளார்கள். எனவே இங்கு இந்நகரில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சிகள் நடந்து வருகிறது. இதற்கு கடந்த 6 மாதங்களில் சுமார் 4000 நபர்கள் ஆதரிப்பதாக கையெழுத்திட்டுள்ளனர்.
இத்திட்டத்தின்படி சூரிச் நகரில் தேர்ந்தெடுக்கப்பட்ட 500 நபர்களுக்கு 3 வருடங்களுக்கு மாதந்தோறும் அடிப்படை வருவாய் வழங்குவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த தொகை எவ்வளவு? அந்த 500 நபர்கள் எவ்வாறு தேர்ந்தெடுப்பார்கள்? என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. ஆனால் விரைவாக இத்திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது.