Categories
உலக செய்திகள்

சுவிட்சர்லாந்து ஜனாதிபதிக்கு கொரோனா…. அரசு வெளியிட்ட அறிக்கை…!!!

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜனாதிபதியும், வெளியுறவு மந்திரியுமான இக்னேஷியா கேஸ்சிஸ் இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்கள் நடக்கும் முனீச் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்கவிருந்தார்.

இந்நிலையில், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. எனினும், அவருக்கு கொரோனாவிற்கான அறிகுறிகள் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, அவர் தனிமைப்படுத்திக்கொண்டிருப்பதாகவும், ஞாயிற்று கிழமை வரை வீட்டில் இருந்தவாறு பணிகளை மேற்கொள்வார் என்றும் அரசு அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

Categories

Tech |