Categories
உலக செய்திகள்

“திடீரென்று பயணத்தடையை நீக்கிய சுவிஸ் அரசு!”…. என்ன காரணம்….? வெளியான தகவல்…!!

சுவிட்சர்லாந்து அரசு, குளிர்காலத்திற்காக வரும் சுற்றுலா பயணிகளுக்காக கடும் பயண விதிமுறைகளை கைவிடுவதாக அறிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்து அரசு, இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஓமிக்ரான் வைரஸால் ஏற்பட்ட அச்சுறுத்தலால் பல்வேறு நாடுகளுக்கு பயணக் கட்டுப்பாடுகளை விதித்தது. மேலும் தங்கள் நாட்டிற்கு வரும் மக்கள், பத்து நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் அறிவித்தது. எனினும், கடந்த 4 ஆம் தேதி அன்று சில விதிமுறைகளை நீக்கியது.

எனவே, அறிவிக்கப்பட்ட கொரோனா விதிமுறைகளை நீக்கிய முதல் நாடு சுவிட்சர்லாந்து என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கு பதிலாக பிசிஆர் மற்றும் ரேபிட் ஆன்ட்டிஜன் பரிசோதனைகளை மக்கள், தங்கள் சொந்த செலவில் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, சுவிட்சர்லாந்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளிலும் படுக்கை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும் ஊழியர்களும் குறைவாக இருக்கிறார்கள். இது மட்டுமல்லாமல், சூரிச் மாநிலத்தில் அவசர சிகிச்சை பிரிவில் படுக்கைகள் நிறைந்துவிட்டன. எனினும், தற்போது பனிச்சறுக்கு போட்டிகள் நடைபெறும் காலம். எனவே, குளிர் காலத்திற்காக வரும் சுற்றுலா பயணிகளை நம்பி சுவிட்சர்லாந்து அரசு, விதிமுறைகளை நீக்கியிருக்கிறது.

Categories

Tech |