Categories
உலக செய்திகள்

சுவிட்சர்லாந்தில் புயல் எச்சரிக்கை.. வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்..!!

சுவிட்சர்லாந்தில் வானிலை ஆராய்ச்சி மையம், நாட்டின் மத்திய பகுதியிலும், தெற்கு பகுதியிலும் கடும் புயல் உருவாகப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் இன்று மதியம் ஒரு மணியிலிருந்து ஆறு மணி வரைக்கும் கடும் புயல் உருவாகவுள்ளதாகவும், அதன் தீவிரத்தன்மை 4-ல் 3 என்ற அளவாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளார்கள். நாட்டில் சனிக்கிழமையில் இருந்து நேற்று வரை இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை மற்றும் புயல் அதிக சேதத்தை ஏற்படுத்தியது.

மேலும் 30,000 மின்னல்கள் உருவாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மத்திய பகுதி மற்றும் டிசைனா போன்ற பகுதியிலும் பெருவெள்ளம் உருவாகி சாலைகளிலும் ரயில் போக்குவரத்திலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. எனினும் நல்லவேளையாக எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

சனிக்கிழமை அன்று மாலையில் Appenzellஇல் பகுதியில் பத்தே நிமிடங்களில் 33.2 மில்லிமீட்டர் மழை பொழிந்திருக்கிறது. சுவிட்சர்லாந்தில் இது போன்ற குறைந்த நேரத்தில் அதிகமாக மழை பொழிந்திருப்பது இது தான் முதல் தடவையாகும். இதனிடையே வானிலை ஆராய்ச்சியாளர்கள் இந்த வாரம் முழுக்க இடி மின்னலுடன் கூடிய மழை மற்றும் புயல் உருவாகும் என்று கூறியுள்ளார்கள். எனினும் அவை அதிக பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் கூறுகிறார்கள்.

Categories

Tech |