உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டவர்கள் தலையிடலாமா என்பது குறித்து சுவிட்சர்லாந்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டில் வசிப்பிட உரிமை இல்லாதவர்கள் உள்நாட்டு விவகாரங்களில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து வாக்களிக்கலாமா அல்லது அவர்களுக்கு உரிமம் உள்ளதா என்பது தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் எழுபத்தி 73.2% பேர் வெளிநாட்டவர்கள் சுவிட்சர்லாந்து நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடக்கூடாது என்று கூறியுள்ளனர்.
அதிலும் Young Socialist group என்ற அமைப்பு இந்த முடிவுக்கு எதிராக நடுநிலையாளர்களுக்கும் வலதுசாரியைச் சேர்ந்தவர்களுக்கு வாக்களித்துள்ளனர். மேலும் வெளிநாட்டவர்கள் உள்நாட்டு விவாகரங்களில் தங்களின் கருத்தை தெரிவிப்பதற்கு முன்பாக அவர்கள் சுவிட்சர்லாந்தில் கடவுச்சீட்டு பெற முயற்சி செய்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள 26 மாகாணங்களில் 8 மாகாணங்களில் மட்டுமே நிரந்தர வசிப்பிட உரிமை கொண்ட வெளிநாட்டவர்களுக்கு இது தொடர்பான உரிமம் வழங்கப்பட்டுள்ளது. அதிலும் பிரெஞ்சு மொழி பேசும் மக்கள் உள்ள சுவிட்சர்லாந்து பகுதிகளில் வெளிநாட்டவர்களுக்கு மாகாண வாக்கெடுப்பிலும் வாக்களிக்க உரிமம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.