Categories
உலக செய்திகள்

சுவிட்சர்லாந்தின் ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில் …. பொதுச்சபைக் கூட்டதில் நிர்வாக சபை தேர்ந்தெடுப்பு …!!!

 சூக் கூனன் பேர்க் ஸ்ரீ சித்தி விநாயகர் கோவிலில் 2021 ஆம் ஆண்டுக்கான பொதுச்சபைக் கூட்டம் நடைபெற்றது.

சுவிட்சர்லாந்து நாட்டில் சூக் கூனன் பேர்க் ஸ்ரீ சித்தி விநாயகர் கோவிலில் 2021 ஆம் ஆண்டுக்கான  பொது சபை கூட்டமும் ,நிர்வாக சபைத் தேர்வும்  நடைபெற்றது. இதற்கு தலைவர் சுதாகரன் தலைமை தாங்கினார். இந்த பொது சபை கூட்டத்தின்போது ஆலய குரு பாஸ்கரன் அவர்கள் விநாயகருக்கு சிறப்பு பூஜையும் ஆசியுரையும் நிகழ்த்தினார் .இதனைத் தொடர்ந்து தலைவர் தர்மராஜா சுதாகர் தலைமை உரையை நிகழ்த்த , செயலாளர் மற்றும் பொருளாளர் அறிக்கை வாசிக்கப்பட்டது. இதையடுத்து கோவிலில் அமைப்பு நிகழ்வுகளுக்கு நீண்டகாலமாக பணியாற்றிய முன்னாள் தலைவர் ஆறுமுகம் பாலசிங்கம் கடந்த நிர்வாக சபையினரின் செயல்திறனை பாராட்டி கருத்து தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பொது சபை உறுப்பினர்களும் கடந்த நிர்வாக சபை தலைவர் சுதாகரன் ஆகியோரும் பணிகளை பாராட்டி பேசியுள்ளனர். அதனைத் தொடர்ந்து பொது சபை உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்த பின் பழைய  நிர்வாக சபை கலைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பொது சபை உறுப்பினர்கள் ஒருவர் யாப்புக்கான வரைவு ஒன்றை முன்வைத்தார். இதனை நிர்வாக சபையின் மூலமாக  பரிசீலனைக்கு உட்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டதோடு 2021 ஆம் ஆண்டிற்கான நிர்வாக சபையும் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த 2021 ஆம் ஆண்டிற்கான நிர்வாக சபை தலைவராக மீண்டும் தர்மராஜா சுதாகர் நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து செயலாளராக சாந்தரூபன் கரன் , பொருளாளராக ஆறுமுகம் பாலசிங்கம் ,துணைத் தலைவராக காண்டீபன் அமிர்தலிங்கம் மற்றும் துணை செயலாளராக லட்சம் சாந்தகுமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து நிர்வாக சபை  உறுப்பினர்களாக சியாமளா – பரமேஸ்வரன் , கௌரி தவராசாவும் இளங்கோ – சிவநேசனும் தேர்வு  செய்யப்பட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியின்போது ஈழத்தில் உள்ள ஏழை மக்களுக்கு உதவும் விதமாக ஆண்டுதோறும் கோவிலின் நிதியில்  இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |