ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னி நகரில் உள்ள சில பகுதியை சேர்ந்த மக்கள் மூன்று நாட்களாக தண்ணீரில்லாமல் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் உள்ள சில பகுதிகளை சேர்ந்த மக்கள், மூன்று தினங்களாக நீரில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலை, சாலைகளிலும், பொது போக்குவரத்தில் பிரச்சனையை உண்டாக்கியுள்ளது.
அதாவது, அங்கிருந்த குடிநீர் குழாயில் உடைந்திருப்பதால் தான் இந்த நிலை என்று கூறப்பட்டிருக்கிறது. இதனால், கழிவறையை சுத்தப்படுத்த முடியாத நிலை இருக்கிறது என்றும் மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்த பிரச்னையை சரி செய்ய அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். எனினும், நீர் விநியோகத்தை மொத்தமாக மீட்பதற்கு சில காலங்கள் ஆகும் என்று தெரிவித்திருக்கிறார். 1,00,000 மக்கள் இருக்கும் 11 புறநகர்ப் பகுதிகளில், 200 கடைகளுக்கும், குடியிருப்பாளர்களுக்கும் நீர் விநியோகம் கிடைக்கவில்லை என்று Sydney Water தெரிவித்திருக்கிறது.