13-வது சையத் முஷ்டாக் அலி டி20 போட்டி டெல்லியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது .இதில் 38 அணிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் நடப்பு சாம்பியனான விஜய் சங்கர் தலைமையிலான தமிழ்நாடு அணியும், மனிஷ் பாண்டே தலைமையிலான கர்நாடகா அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இதில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப்போகும் அணி எது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது . இதில் டாஸ் வென்ற தமிழக அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.
கர்நாடகா: ரோஹன் கதம், மனீஷ் பாண்டே(கே), அபினவ் மனோகர், கருண் நாயர், ஷரத் பிஆர், பிரவீன் துபே, ஜகதீஷா சுசித், தர்ஷன் எம்பி, பிரதீக் ஜெயின், கேசி கரியப்பா, வித்யாதர் பாட்டீல்.
தமிழ்நாடு : ஹரி நிஷாந்த், என் ஜெகதீசன், சாய் சுதர்சன், விஜய் சங்கர்(கே), சஞ்சய் யாதவ், ஷாருக் கான், எம் முகமது, முருகன் அஸ்வின், சாய் கிஷோர், சந்தீப் வாரியர், டி நடராஜன்.