Categories
கிரிக்கெட் விளையாட்டு

சையத் முஷ்டாக் அலி :கேரளாவை வீழ்த்தியது தமிழ்நாடு அணி ….! அரையிறுதிக்கு முன்னேற்றம் …..!!!

சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் கேரளா அணிக்கெதிரான காலிறுதி ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தமிழக அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

சையத் முஷ்டாக் அலி டி20 தொடர் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது .இதில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு – கேரளா அணிகள் பலப்பரீட்சை நடத்தின இதில் டாஸ் வென்ற தமிழக அணி பீல்டிங் தேர்வு செய்தது அதன்படி முதலில் களமிறங்கிய கேரளா அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் குவித்தது .இதில் அதிகபட்சமாக விஷ்ணு வினோத் 65 ரன்னும், ரோஹன் குன்னும்மாள் 51 ரன்னும் எடுத்தனர். தமிழக அணி தரப்பில் சஞ்சய் யாதவ் 2 விக்கெட் கைப்பற்றினார் .இதன்பிறகு 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழக அணி களமிறங்கியது.

தொடக்க வீரராக களமிறங்கிய ஜெகதீசன்  7 ரன்னில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு ஜோடி சேர்ந்த ஹரி நிஷாந்த் – சாய் சுதர்சன் ஜோடி சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஹரி மிஷின் 32 ரன்னில் வெளியேற ,அடுத்து  சாய் சுதர்சன் 46 ரன்னில் ஆட்டமிழந்தார். இதில் கடைசி 3 ஓவரில் தமிழக அணி வெற்றி பெற 37 ரன்கள் தேவைப்பட்டது .அப்போது  சுரேஷ் விஷ்வேஸ்வர் வீசிய ஓவரில் சஞ்சய் யாதவ் ஒரு  பவுண்டரி அடிக்க , ஷாருக் கான் 2 சிக்சர்கள் அடித்து விளாசினார். இறுதியாக தமிழக அணி 19.3 ஓவரில் 187 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது .இதன் மூலம் தமிழக அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

Categories

Tech |