தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் என்ற புதிய வகை கொரோனா மாறுபாட்டிற்கான அறிகுறிகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்ரிக்காவில் கெளடெக் மாகாணத்தில் இருக்கும் மருத்துவமனையின் பொது நல மருத்துவரான டாக்டர் அன்பென் பிள்ளே, தற்போது கொரோனா தொற்று பாதிப்புகள் 81% பதிவாகியிருப்பதாக கூறியிருக்கிறார். தற்போது வரை, இந்த ஓமிக்ரான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வரும் நபர்களுக்கு சிறிய அறிகுறிகள் தான் ஏற்பட்டிருக்கிறது.
அதாவது, காய்ச்சல், வரட்டு இருமல், இரவு சமயத்தில் அதிகமான வியர்வை மற்றும் உடல் வலி போன்றவை தான் ஓமிக்ரான் வைரஸின் அறிகுறியாக இருக்கிறது. உலக சுகாதார மையமானது, ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பின் அறிகுறிகள், பல வாரங்கள் கடந்த பின் தான் தெரியும் என்று தெரிவித்துள்ளது.
எனினும், அவை அதிக பாதிப்புகளை கொண்டிருக்கிறதா? மோசமான விளைவுகளை ஏற்படுத்துமா? என்பது தற்போது வரை தெரியவில்லை என்று உலக சுகாதார மையம் கூறியிருக்கிறது.