கொரோனா வைரசின் அறிகுறிகளாக ஆய்வாளர்கள் கூறுவது என்னென்ன?
கொரோனா வைரசின் அறிகுறிகள் :-
1. ஒரு மணி நேரத்திற்கும் மேல் தொடர்ச்சியான இருமல் ( அல்லது ) 24 மணி நேரத்துக்குள் நான்கு ( அல்லது ) மூன்று முறை தொடர் இருமல் ஏற்படும்.
2. காய்ச்சல், 37.8 டிகிரி செல்சியசை விட உங்களுடைய உடல் வெப்பம் அதிகமாக இருக்கும்.
3. நாக்கால் சுவையையும் மற்றும் மூக்கால் வாசனையையும் உணர முடியாமல் போகலாம்.
4. சிலருக்கு சளி அதிகரிப்பது போன்ற அறிகுறிகளும் காணப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
5. தொண்டை கரகரப்பு, மூக்கு ஒழுகல், தொண்டை எரிச்சல் மற்றும் தலைவலி உள்ளிட்டவையும் கொரோனாவுக்கான அறிகுறிகளே ஆகும்.
உலக சுகாதார நிறுவனம் கூறும் கொரோனா வைரஸ் அறிகுறிகள் :-
மேல் குறிப்பிட்ட அறிகுறிகள் இல்லாமல் சில நேரங்களில் வயிற்றுப்போக்கு ஏற்படுவதும் கொரோனா வைரசின் அறிகுறிகளே ஆகும்.