Categories
காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனா அறிகுறியுடன் தப்பிய இளைஞன்… மடக்கி பிடித்த காவல்துறை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து அறிகுறியுடன் தப்பி ஓடிய இளைஞனை காஞ்சிபுரம் எனும் பகுதியில் காவல்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் தங்கி பணியாற்றி வந்த இளைஞன் ஊரடங்கு உத்தரவின் காரணமாக சொந்த ஊரான கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் அந்த இளைஞர் கொரோனா அறிகுறி இருந்ததாக கிருஷ்ணகிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீரென மருத்துவமனையில் இருந்து அந்த இளைஞர் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இளைஞர் தப்பி ஓடிய தகவலின்படி காஞ்சிபுரத்தில் பதுங்கியிருந்த இளைஞரை மடக்கிப் பிடித்த காவல்துறையினர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

Categories

Tech |