Categories
உலக செய்திகள்

அமெரிக்க படைகள் அதிரடி தாக்குதல்.. வானில் பொழிந்த குண்டு மழை.. பரபரப்பு வீடியோ வெளியீடு..!!

அமெரிக்கா, ஈராக்கிலும், சிரியாவிலும் இருக்கும் ஈரான் ஆதரவுடன் இயங்கி வரும் போராளிகள் அமைப்பை நோக்கி வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளது.

அமெரிக்காவின் படைகளை நோக்கி, போராளிகள் குழு ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஆயுதக் கிடங்கை நோக்கி அமெரிக்க படையினர் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டதால் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக  கூறப்பட்டுள்ளது.

https://twitter.com/BabakTaghvaee/status/1409302302859612160

ஈராக்கிலும் சிரியாவிலும் இருக்கும் ஈரான் ஆதரவுடன் இயங்கும் Kataib Sayyid al-Shuhada மற்றும் Kataib Hezbollah போராளிகளின் குழுவின் தளங்களை நோக்கி இத்தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் பலியானவர்கள் தொடர்பில் தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

ஆனால் மனித உரிமைகள் குழு, இத்தாக்குதலில் 5 பேர் உயிரிழந்ததாகவும், பலருக்கு காயம் ஏற்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறது. அதே நேரத்தில் சிரியாவின் அரசு ஊடகம், இத்தாக்குதலில் ஒரு குழந்தை உயிரிழந்ததாகவும், ஏறக்குறைய மூன்று நபர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும்  தெரிவித்துள்ளது.

Categories

Tech |